full screen background image

“விஜய் சேதுபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்..” – நடிகை ஸ்ரீஜாவின் நம்பிக்கை..!

“விஜய் சேதுபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்..” – நடிகை ஸ்ரீஜாவின் நம்பிக்கை..!

‘கங்காரு’, ‘வந்தா மல’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுத்தமான தமிழச்சியான நடிகை ஸ்ரீபிரியங்கா, தற்போது தனது பெயரை ‘ஸ்ரீஜா’ என்று மாற்றி வைத்துள்ளார்.

actress sreeja-2

“தமிழில் நன்கு பேசவும், நடிக்கவும் தெரிந்த தமிழ் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை..” என ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி அமர்ந்திருந்த ஒரு மேடையிலே சில மாதங்களுக்கு முன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ஸ்ரீஜா. இவருக்கு பதில் சொன்ன நடிகர் விஜய் சேதுபதி “வாய்ப்பு வரும்போது நானே கூப்பிடுகிறேன்…” என்று அதே மேடையில் தெரிவித்தார்.

ஆனாலும் இதற்குப் பின்னும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல்தான் இருக்கிறார் ஸ்ரீஜா. சென்னையில் இன்று நடைபெற்ற ‘மை கிராண்ட் வெட்டிங் மொபைல் அப்ளிகேஷன்’ வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஸ்ரீஜா.

IMG_6986

அப்போது அவரிடம் இது பற்றி ஞாபகப்படுத்திய பத்திரிகையாளர்கள்,  “இப்போது வாய்ப்புகள் ஏதும் தேடி வந்ததா..?” என கேட்டதற்கு, “அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். ‘உங்களுக்குன்னு ஒரு கேரக்டர் வரும்போது அழைப்பதாக’வும் சொன்னார்கள். அவர்கள் கண்டிப்பாக அழைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..” என்றார்.

“எப்போ கல்யாணம்..?” என்று திடுக்கென்று ஒரு கேள்வியை கேட்க.. மிரண்டு போனார் ஸ்ரீஜா. “என்னங்க. இப்பத்தான் நாலு சான்ஸ் தேடி வரும்னு நம்பிக்கைல இருக்கேன்னு சொன்னேன். அதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பிருவீங்க போலிருக்கு. இன்னும் இந்தத் தமிழ்த் திரையுலகில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை. ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் இந்த ‘மை கிராண்ட் வெட்டிங் மொபைல் அப்ளிகேஷன்’ எனக்கு ரொம்பவே கை கொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.

அம்மணி.. அந்த மொபைல் அப்ளிகேஷனை வைச்சு மாப்பிள்ளையெல்லாம் பார்த்து பேசி முடிக்க முடியாது… கல்யாண மண்டபத்தைத்தான் புக் பண்ண முடியும்.. பார்த்துக்குங்க..!

Our Score