full screen background image

“ரஜினியுடன் காதல் காட்சிகளில் நடிக்க வெட்கப்பட்டேன்..” – சோனாக்சி சின்ஹாவின் பேட்டி..!

“ரஜினியுடன் காதல் காட்சிகளில் நடிக்க வெட்கப்பட்டேன்..” – சோனாக்சி சின்ஹாவின் பேட்டி..!

‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் தான் காதல் காட்சிகளில் நடித்தபோது வெட்கமாக இருந்தாகவும், ரஜினியே தன்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்த்தாகவும் ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்த விரிவான பேட்டியில் வெட்கத்துடன்  சொல்லியிருக்கிறார் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா.

அந்தப் பேட்டியில், “லிங்கா’ படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் எனது அப்பா  மிகுந்த சந்தோஷம் அடைந்தார். ரஜினி ஸாரும் எனது அப்பாவும் சிறந்த நண்பர்கள். இருவரும் இந்தியில் அஸ்லி–நக்லி (அசலும், நகலும்) என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்த படம் ரிலீசான ஒரு வருடம் கழித்துதான் நான் பிறந்தேன்.

ரஜினியுடன் நான் நடிக்கப் போகிறேன் என்றதும் எனது அப்பா அவரை புகழ்ந்து தள்ளினார். “ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, எளிமையானவர், கட்டுப்பாடுமிக்கவர், பக்திமான்..” என்று அடுக்கிக்கொண்டே போனார். “உங்க நண்பராச்சே..? எப்படி விட்டு கொடுப்பீர்கள்..?” என்று நான்கூட கேலியாக பேசினேன்.

linga-23

ஆனால் அவருடன் நடித்தபோதுதான் ரஜினி பற்றி அப்பா கூறியது எவ்வளவு உண்மையானது என்பது புரிந்து கொண்டேன். அவரிடம் ரசிகர்கள் அன்பு மட்டும் காட்டாமல் பைத்தியமாக இருப்பது ஏன் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பின் போது ‘பேக்கப்’ என்றதும் அனைத்து ஹீரோக்களும் உடனடியாக சென்று விடுவார்கள். ஆனால் ரஜினி ஸார் உடன் நடித்தவர்களுடன் அமர்ந்து பேசி, அவர்களை பாராட்டியதும், நலன் விசாரித்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை பற்றி அப்பா சொன்னது கொஞ்சம்தான் என தெரிந்தது.

linga-still-5

ரஜினி ஸாருடன் நடிக்கும்போது முதலில் எனக்கு வெட்கமாக இருந்தது. ரஜினிதான் எனக்கு உற்சாகமூட்டினார். ‘எனது நண்பர் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க, நான்தான் வெட்கப்பட வேண்டும். நீ வெட்கப்படுறியே..’ எனக் கூறி எனக்கு தைரியமூட்டினார்.

நடிக்கும்போது பெரியவர்கள், சிறியவர்கள் என்று பார்க்கக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். என்னை பாலிவுட் நடிகை என்கிறார்கள். ஆனால் ‘லிங்கா’ படத்தில் நான் தென்னிந்திய நடிகையாகவே மாறி இருப்பதை அனைவரும் உணருவார்கள்.

‘லிங்கா’ படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு மொழி தெரியாததால் அதனை புரிந்து கொண்டு நடிப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. ‘6 மாதத்தில் முடிக்க வேண்டிய படத்தை உனக்காகத்தான் இவ்ளோ மெதுவாக எடுக்கிறோம்’ என்றனர்.

Lingaa-rajini-sonakshi

எனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டி உற்சாகப்படுத்தினார். எனக்கு தெரியாததை சொல்லி கொடுத்தார். எனது உண்மையான ரசிகர்கள் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாதான். எனது நடிப்பின் நிறை, குறைகளை உடனே சுட்டிக்காட்டி விமர்சிப்பார்கள். அவர்களை நான் ‘பீபி’(அக்காள்) என்றே அழைப்பேன்.

லிங்கா படத்தில் 1940–ம் ஆண்டு நடக்கும் கதையின் கதாநாயகி என்பதால் ஜாக்கெட் இல்லாமல் என்னை நடிக்க சொன்னார்கள். 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் கேரக்டர் என்பதால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தேன். நீச்சல் உடையில்கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது. அப்புறம் பழகி விட்டது.

அந்த வேடத்தில் எனக்கு பேச்சு குறைவு. கண்களாலே பேசி நடிக்க வேண்டும். எனது நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டினார். இதனை ஒரு சவாலாக செய்து முடித்தேன். படம் ரிலீஸ் ஆனதும் என்னை தென்னிந்திய நடிகை என்றே பலர் கூறுவார்கள்..” என்று சொல்லியிருக்கிறார் சோனாக்சி.

Our Score