மீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா

மீண்டும் நடிக்க வரும் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ சாந்திப்பிரியா

நடிகை பானுப்பிரியாவின் தங்கையும், நடிகையுமான சாந்திப்பிரியா மீண்டும் நடிக்க வருகிறார்.

எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைதான் சாந்திப்பிரியா, அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார்.

அக்கா பானுப்பிரியாவைப் போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

அதன் பின்பு திருமணம், பிள்ளைகள் என்று குடும்ப வாழ்க்கையில் இருந்தவர் தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார். 2012-க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சாந்திப்பிரியா. OTT வெப் தொடரில் தற்போது களமிறங்கியுள்ளார் சாந்திப்பிரியா.

zee studios original  நிறுவனம் Mx player-க்காக முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் தயாரிக்கும் இணையத் தொடரில்தான் மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் சாந்திப்பிரியா நடிக்கவுள்ளார்.

Our Score