‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் ப்ரியங்கா ரூத். அதைத் தொடர்ந்து, ‘மெட்ரோ’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற படங்களிலும் நடித்தார். ‘பயமறியா பிரம்மை’ என்ற படத்திலும் நடித்துள்ளார். அது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ‘ஜீ’ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வீட்டில் இருக்கும் பெண்களின் கவனத்தைக் கவர்ந்தார். ‘in the name of God’ என்ற தெலுங்கு வெப் சீரிஸிலும் நாயகியாக நடித்துள்ளார்.
இது மட்டுமின்றி பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இன்னமும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
கூடவே, பார்த்திபன் மற்றும் A.R.ரஹ்மான் காம்போவில் ஒரே ஷாட்டில் உருவாகப் போகும் ‘இரவின் நிழல்’ படத்திலும் நடிக்கவுள்ளார்.
இவ்வளவு பிசியானாலும் நல்ல கதையம்சம் கொண்ட வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சாய் பிரியங்கா ரூத்.