ஜீவாவுக்கு ஜோடியாகிறார் தெலுங்கு நடிகை ரியா சுமன்..!

ஜீவாவுக்கு ஜோடியாகிறார் தெலுங்கு நடிகை ரியா சுமன்..!

‘றெக்க’ புகழ் ரத்தினா சிவா இயக்கத்தில்  நடிகர் ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத    ஆக்‌ஷன்  திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான மற்றும் அழகான நடிகையான ரியா சுமன் நடிக்கவிருக்கிறார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

ரியா சுமன் ஏற்கெனவே தெலுங்கில் ‘மஜ்னு’ மற்றும் ‘பேப்பர் பாய்’ ஆகிய படங்களில் நடித்தவர்.

Riya-Suman-3

இந்தப் படத்தி்ல நடிப்பது குறித்து ரியா சுமன் பேசும்போது, “தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தெலுங்கு திரைப்படங்களில் நான் இதுவரை செய்த கதாபாத்திரங்கள் சற்றே தீவிரமான கதாபாத்திரங்கள். ஆனால் இந்த படத்தில் எனக்கு மிகவும் துடிப்பான கதாபாத்திரம்.

தமிழ் வசனங்களை எளிதாக பேசிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் படப்பிடிப்பில் நடந்ததே வேறு. தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கு எனக்கு போதுமான நேரம் இல்லை.

riya-suman-2

தமிழ் வசனங்களை எனக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி பெயர்த்து தந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் என் உதவியாளர்களுக்கு நன்றி. நடிகர் ஜீவாவும் அவ்வப்போது வசன உச்சரிப்பில் எனக்கு உதவியாக இருந்தார். என்னை பொறுத்துக் கொண்ட ஜீவா மற்றும் ரத்தின சிவா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய கதாபாத்திரம் வெறுமனே நகைச்சுவையாக மட்டும் இருக்காது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம், நாயகன் நிறைய விஷயங்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் கதாபாத்திரம். 

தமிழ் சினிமாவில் எனக்கு இப்படியொரு அறிமுகத்தைத் தந்தமைக்காக வேல்ஸ் ஃபிலிம் இன்ட்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. அவரை போன்ற திறமையான தயாரிப்பாளரின் படத்தில் பணிபுரிவது எனக்கு பெருமை அளிக்கிறது…” என்றார்.

 

Our Score