full screen background image

இசையமைப்பாளர் இமானின் கன்னத்தைக் கிள்ளிய நடிகை பிரியா ஆனந்த்..!

இசையமைப்பாளர் இமானின் கன்னத்தைக் கிள்ளிய நடிகை பிரியா ஆனந்த்..!

பொதுவாக ‘ஜொள்ளு’ என்பது ஆண்களுக்கே உரித்தானது என்பதுதான் நமது பொதுப்புத்தி..  பெண்களுக்கும் அது உண்டு என்பதை இன்றைக்கு நிரூபித்திருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.

இவர் ஹீரோயினாக நடித்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்த்து. விழாவுக்கு வெறும் ஜாக்கெட், பாவாடையை நினைவுபடுத்தும் டைப்பில், ஒரு உடையை அணிந்து வந்திருந்தார் பிரியா ஆனந்த்.

IMG_0104

வந்ததில் இருந்து எப்போதும்போல அரங்கத்தில் அவரது அலப்பறைதான்.. நட்சத்திரங்கள் வர வர தன்னுடைய இருக்கையை மாற்றிக் கொண்டேயிருந்தார் பிரியா ஆனந்த். சிவகார்த்திகேயன் வந்தவுடன் அருகில் அமர்ந்திருந்த விகாசாவை “தள்ளி உக்காரு…” என்று அதட்டலுடன் சொல்லி தள்ளிவிட்டு உரிமையுடன் அருகில் அமர்ந்தார்.

IMG_0265

மேடையேறிய பின்பும் இதே கதைதான்.. ஒரு ஓரமாக போய் அடக்கமாக அமர்ந்த சிவகார்த்திகேயனை நடுப்பகுதிக்கு வருமாறு திரும்பத் திரும்ப அழைத்தார் பிரியா ஆனந்த். ஆனால் அதற்குள் தொகுப்பாளர் தனது பேச்சைத் துவக்கிவிட கப்சிப் ஆனார். ஆனாலும் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.

IMG_8909

ஒரு பாடல் காட்சியில் ‘அஞ்சான்’ சமந்தாவுக்கு போட்டி போடுவதை போல ஆடை குறைப்பு செய்து அதிர வைத்திருந்தார் பிரியா ஆனந்த். அந்தப் பாடல் காட்சியைக் குறிப்பிட்டு பேசிய நடிகர் சிங்கமுத்து.. “அந்த  பாட்டு சீன்ல பிரியா ஆனந்த் ரொம்ப ப்ரீயா கலர்புல்லா இருந்துச்சு.. வயசானவன், எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சு.. அப்ப உங்களுக்கெல்லாம் எப்படியிருந்துச்சோ..?” என்று சிலேடையாக போட்டுடைக்க.. பிரியா ஆனந்த் வெட்கத்தில் கீழே குனிந்து முகத்தைப் பொத்திக் கொண்டார். மனோபாலாவும் தன் பேச்சில் இதையே குறிப்பிட்டு பேசி கைதட்டலை வாங்கிக் கொண்டு போனார்.

பிரியா ஆனந்தை பேச அழைத்தார் தொகுப்பாளினி. “அவங்க உக்காந்தே பேசப் போறாங்க. ஏன்னு அவங்க சொல்ல்லைன்னாலும் எனக்குத் தெரியும். இன்னிக்கு அவங்க போட்டுட்டு வந்திருக்கிற டிரெஸ் அப்படி..!” என்று தொகுப்பாளினி சொல்லி முடிப்பதற்குள்ளாக மைக்கோடு எழுந்து நின்று தனது ‘அழகை’ காட்டிவிட்டார் பிரியா ஆனந்த்.

தொகுப்பாளினி பிரியா ஆனந்திடம் “நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். டைரக்டர் கண்ணன் ஸார்தான் சொன்னார்.. ரொம்ப நாளா உங்களுக்கு ஒரு ஆசையிருக்காமே.. இமான் ஸார் கன்னத்தை பார்த்தா கிள்ளணும்னு. அப்படியா..?” என்று கேட்க கூட்டம் உறைந்து போனது.. அடுத்து நடந்ததுதான் உச்சக்கட்டம்..

பயங்கர சிரிப்போடு மைக்கில் பேசிய பிரியா ஆனந்த், “ஆமாமாம்.. எனக்கு இமான் ஸாரோட பொசு பொசு கன்னத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதை அப்படியே பிடிச்சு கிள்ளணும்போல தோணும்.. இன்னிக்குத்தான் எனக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு.. ஸார் ஒருவாட்டி செஞ்சுக்குறேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாக இசையமைப்பாளர் இமானின் அருகில் சென்று அவரது கன்னத்தைக் கைகளில் பிடித்து, “என் செல்லக்குட்டி.. என் புஜ்ஜிகுட்டி.. என் பொம்முக்குட்டி…” என்று மைக்கிலும் சொல்லியபடியே கிள்ளினார்.

priya anand-iman-1

பாவம் இமான்.. தடுக்கவும் முடியவில்லை.. மறுக்கவும் முடியாமல் தவித்தார். இத்தனைக்கும் இமானின் மனைவி, இந்தக் கூத்தை மேடைக்கு கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.. ஒரு நிமிடத்தில் அரங்கம் அதிர்ந்தது.. இதற்குப் பின் எந்தச் சலனமும் இல்லாமல் மேற்கொண்டு படத்தைப் பற்றி பேசி முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தார் பிரியா ஆனந்த்..!

இவருக்குப் பின் பேச வந்த நடிகர் சிவகார்த்திகேயன்.. “இமான் ஸார் லக்கி.. ரொம்ப கொடுத்து வைச்சவர். அதான் அவர் கன்னத்தைக் கிள்ளக்கூட ஒரு நடிகை இருக்காங்க..  நமக்கெல்லாம் ஒன்லி கிசுகிசு மட்டும்தான் போல.. எனக்கும் இது மாதிரி ஒண்ணு நடந்துச்சு.. உங்களுக்கு ஞாபகமிருக்கும்.. ‘என்னய்யா நடக்குது’ன்னு மேடைல கேட்டாங்க. ‘அன்னிக்கு எனக்கு என்ன நடந்துச்சோ.. அதேதான் இன்னிக்கு நடந்துச்சு’ன்னு சொன்னேன்.. அன்னிக்கு என் வீட்ல என்ன நடந்துச்சோ.. அது இன்னிக்கு இமான் ஸார் வீட்லேயும் நடக்கும்னு நினைக்கிறேன்..” என்று ஏத்தியும்விட்டார்.

இசையமைப்பாளர் இமான் பேசும்போது.. இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இன்னிக்கு வீட்ல எனக்கு நிச்சயமா அடி உண்டுன்னு நினைக்கிறேன்..” என்று மென்மையாகச் சொல்லிவிட்டுப் போனார்.

படத்தின் விளம்பரத்திற்கோ.. அல்லது நிசமான ஆர்வத்திற்கோ.. இப்படி பப்ளிக்கில் நெருக்கம் காட்டுவது பார்ப்பவர்களின் மனதை சலனப்படுத்தும் விஷயம் என்பதை இவர்கள் புரிந்து கொண்டால் நல்லது..!

நாளை யாராவது ஒரு நடிகர் ‘எனக்கு பிரியா ஆனந்தின் கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.. அதைச் செய்து கொள்கிறேன்…’ என்று கேட்டு வந்தால் பிரியா ஆனந்த் எழுந்து நின்று கன்னத்தைக் காட்டுவாராமா..?

என்னவோ போடா மாதவா..? ஆயிரம் தமிழ்க்குடிதாங்கிகள் வந்தாலும் இவர்களைத் திருத்த முடியாது..!

Our Score