சர்வேதச அளவில் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் கொடி கட்டி பறக்கும் ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
இதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் இன்னும் ஆழமாக கால் பதித்து இருக்கிறது ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனம்.
“நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்பது எங்கள் ஈரோஸ் நிறுவனத்தின் எண்ணம். அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பது, எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.
கதைக் களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து, அதன் பின் தேர்ந்தெடுப்பவர் நயன்தாரா என்பது ஒட்டு மொத்த திரையுலகிற்கும் நன்றாக தெரியும். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் கதையை அறிமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி நயன்தாராவிடம் கூறியதுமே இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்து விட்டார்.
பிரமிக்க வைக்கும் வகையில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை உருவாக்க நாங்கள் அனைவரும் தற்போது இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
இந்த படத்தில் நடன இயக்குநராக செழியன் பணியாற்றுகிறார். மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பற்றிய விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது…” என்றார் ‘ஈரோஸ் சவுத்’ நிறுவனத்தின் தலைவர் சாகர் சத்வானி.