‘கருப்பசாமி குத்தகைதாரர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி.
அதன் பின்பு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் ஒரு படத்தில் ஆடும் நடிகையாககூட நடித்து வருகிறார்.
இன்று காலையில் இருந்து எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டியில் அவர் நடித்த ‘நேர்முகம்’ என்றொரு படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது.
இன்று மாலை படப்பிடிப்புத் தளத்தில் உதவி இயக்குநர் ஆனந்த் என்பவரை அடித்துவிட்டாராம். அடி வாங்கிய வேகத்தில் உதவி இயக்குநர் ஆனந்த் கீழே விழுந்து மயங்கியேவிட்டார் என்று தகவல்.
ஸ்பாட்டில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களும் இதனை எதிர்த்து மீனாட்சியை கெரோ செய்திருக்கின்றனர். மீனாட்சி உடனேயே தனது கேரவன் வேனுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
தொழிலாளர்களும் மீனாட்சி இறந்து வந்து மன்னிப்பு கேட்காமல் கேரவன் வேனை எடுக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
ஒரு வழியாக இரு தரப்பினரும் கலந்து பேசியதில் கடைசியாக மீனாட்சி தான் உதவி இயக்குநரை தாக்கியது தவறு என்று ஒத்துக் கொண்டும், அதற்கு மன்னிப்பு கேட்டும் கடிதம் கொடுத்திருக்கிறார்.
இதன் பின்புதான் தொழிலாளர்கள் அவரை படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேற அனுமதித்தார்களாம்.
ஏன் அடித்தார்..? எதற்கு அடித்தார்..? என்கிற விளக்கங்கள் இனிமேல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.











