‘ஃபில்டர் காபி’ திரைப்படத்தில் பாடல் பாடிய லட்சுமி மேனன்

‘ஃபில்டர் காபி’ திரைப்படத்தில் பாடல் பாடிய லட்சுமி மேனன்

நாகேஷ்வரராவ் தயாரிப்பில் ‘ஹோலி ஹவ் ட்ரீ’’பட நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது ‘ஃபில்டர் காபி’’ திரைப்படம். 

இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேன்னு ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். இது படத்தின் விளம்பரத்திற்கு மிகவும் உதவும் என்று இப்படக்குழுவினர் நம்புகிறார்களாம்.

லட்சுமி மேனன் ஏற்கெனவே ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படத்தில் ‘குக்குரு குக்குரு’ என்ற பாடலை பாடியிருந்தார். இது அவர் பாடும் இரண்டாவது பாடலாகும்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ராகவிடம் கேட்டபோது, “தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி ஒரு தவிர்க்க முடியாத விஷயம். எல்லாவித விருந்துகளிலும், விருந்தோம்பல்களிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. அதைப் போலவே நான் இயக்கப் போகும் இந்த ‘ஃபில்டர் காபி’ திரைப்படமும்,  தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பெறும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.  

ஒருவரை உபசரிப்பது, வரவேற்பது மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் நிகழ்விற்கும்கூட காபி அவசியமாகிவிட்டது. அதுவும் ஃபில்டர் காபி என்றால், அதன் மகத்துவமே தனி. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை காபியோடு கொண்டாதுவதுபோல்,  இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் வேறு ஒரு நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். அது எம்மாதிரியான நிகழ்வு என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். அதுதான் திரைக்கதையின் பலம்..” என்றார்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராகவ், இயக்குவதோடு இல்லாமல் ஒளிப்பதிவாளர் பணியையும் சேர்த்தே செய்கிறார். இவர்களோடு இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியனையும் சேர்த்தால் மூவருமே 20 வயதுக்கு உட்பட்ட துறு துறு இளைஞர்கள் என்பதால்,  படமே இளமைத் துள்ளலோடுதான் இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் நாகேஷ்வரராவ்.

DSC_0053

லட்சுமி மேனன் பாடிய பாடல் பற்றி  இசையமைப்பாளர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், “படத்தின் பாடல்களை ராகவ், ராஜ்குமார் மற்றும் ஷேஸா கோ மூவரும் எழுதியிருக்கின்றனர். முக்கியமாக, படத்தின் ப்ரமோ பாடலாக வரும் ‘ஓ காபி பெண்ணே’ பாடலை நடிகை லட்சுமி மேனன், தன் காந்தக் குரலால் பாடி அசத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கும். இதற்காக புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். ‘ஃபில்டர் காபி’ எனக்கு முதல் படம் என்றாலும், முத்தாய்ப்பான படமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..” என்றார்.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மட்டுமல்ல, இந்தப் படத்தின் நாயகர்கள் நரேன் பாலாஜி, தமீன் அன்சாரி, கார்த்திக் மற்றும் நாயகி சங்கீதா உட்பட பிரதான கதை மாந்தர்கள் அனைவரும் புதுமுகங்களே. முற்றிலும் புதுமுகங்களோடு, அறிமுக இளைஞர் பட்டாளமாக களமிறங்கும் ‘ஃபில்டர் காபி’ சூடு பறக்க தமிழ்ச் சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கும்போல் தெரிகிறது. 

Our Score