full screen background image

இன்றைய ஹீரோயின்கள் வெறும் பொம்மைகள்தான் – நடிகை லட்சுமியி்ன் வருத்தம்..!

இன்றைய ஹீரோயின்கள் வெறும் பொம்மைகள்தான் – நடிகை லட்சுமியி்ன் வருத்தம்..!

அன்று முதல் இன்றுவரையிலும் தனது மங்காத நடிப்பால் ஜொலித்து வருகிறார் நடிகை லட்சுமி. நான்காம் தலைமுறை நடிகர்களோடும் நடித்து வரும் இவர் இத்தலைமுறை நடிகர்களின் சினிமா அணுகுமுறையை கண்டு வியந்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் ‘மூணே மூணு வார்த்தை’ படம் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

IMG_7043

“இப்படத்தில் நடித்த அனைவருமே எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். இவர்களுடன் நடிப்பது எனக்கு புது அனுபவமாய் இருந்தது. நகைச்சுவை கலந்த காதல் படத்தை முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக் களத்தில் தந்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.  

SPB சாருடன் தெலுங்கில் ‘மிதுனம்’ என்ற படத்தில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. அதை தொடர்ந்து தமிழில் நாங்கள் இணையும் முதல் திரைப்படம் ’மூணே மூணு வார்த்தை’. முதலில் எங்களை நாயகனின் அப்பா-அம்மாவாகத்தான் நடிக்க சொன்னார் மதுமிதா. நாங்கள் சற்று தயங்கியதை தெரிந்தவுடன்  உடனே சில மாறுதல்களுடன் தாத்தா-பாட்டி கதாப்பாத்திரங்களாக மாற்றியமைத்தார்.

IMG_7142

எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. உண்மையில் இப்போது நான் பாட்டிதானே. மேலும் ‘ஜீன்ஸ்’ படத்திலேயே நான் பாட்டியாக நடித்து விட்டனே..?

IMG_7715  

இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி மற்றும் இயக்குநர் மதுமிதாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் SP சரண் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘மூணே மூணு வார்த்தை’ திரைப்படம் குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படம்.

இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழி படத்தை இயக்குவது சாத்தியமன்று. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவை. அவர்கள்  இன்னும் வியாபாரத்துக்கான  ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்..” என்று பளிச்சென்று கூறுகிறார் லட்சுமி.

Our Score