‘கவிதா பாபி’ வெப் சீரிஸ் நாயகி வேலு பிரபாகரன் படத்தில் நடிக்கிறார்

‘கவிதா பாபி’ வெப் சீரிஸ் நாயகி வேலு பிரபாகரன் படத்தில் நடிக்கிறார்

இயக்குநரும், நடிகருமான வேலு பிரபாகரன், தனது அடுத்தப் படத்தை இயக்கும் வேலையில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

இந்த நிலையில் அவரது படத்தில் இருந்த ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க தமிழ்ச் சினிமாவில் இருக்கும் எந்த நடிகையும் முன் வரவில்லையாம்.

இது குறித்து மிகவும் மனம் நொந்த நிலையில் தனது முகநூலில் எழுதியிருக்கிறார் வேலு பிரபாகரன்.

“எனது படத்தில் எந்த நடிகையும், புதுமுகமாக இருந்தாலும் நடிக்க மறுப்பது வேடிக்கை.. பல நேரங்களில் வேதனை தருகிறது,

இத்தனைக்கும் ஒரு பரட்சிக்காரனை தேடி பிடிக்கும் பெண் ஐ.பி.எஸ்.வேடம். ஒரு வருடமாக பலரை கேட்கிறேன். நெருங்கி வந்தாலும் கடைசியில் ஹூம்.

இந்த நாடும் இங்கே மலிந்து இருக்கும் காமடி விமர்சகர்களும், முட்டாள் சினிமாக்காரன்களும், அறிவற்ற ஊடகங்களும் செய்து வைத்து இருக்கும் வேலை, நான் ஆபாச படம் எடுக்கும் இயக்குநர் என்பதை பரப்பி இருப்பது.

பரவாயில்லை… பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் எதிர் கொள்ள வேண்டியதுதான். 

அருமையான புரிதல்கள் கொண்ட கவிதா அவர்கள் இணைந்து இருக்கிறார். Kavitha .. and saif.. We wil rock..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் நடிகை கவிதா, ஹிந்தி வெப் சீரிஸ் உலகத்தில் மிகவும் பிரபலமானவர்.

கவிதா பாபி’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பல ஆபாச வெப் சீரிஸ்களில் நடித்துப் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score