விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் காவ்யா தாபர்

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் காவ்யா தாபர்

பிரசாந்த் நடித்த  ‘ஜாம்பவான்’, அர்ஜுன் நடித்த  ‘வல்லக்கோட்டை’, சசிகுமார் – நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ராஜ வம்சம்’ ஆகிய படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் T.D.ராஜா.

இவர் தற்போது ‘மெட்ரோ’ படத்தின் இயக்குநரான ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.

அரசியல் கலந்த த்ரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ‘மார்க்கெட் ராஜா M.B.B.S.’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை  காவ்யா தாபர் நாயகியாக நடிக்கிறார்.

IMG_20190801_110053

இவர் ‘ஈ மாயா ப்ரேமிட்டோ’  எனும் தெலுங்கு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகினார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் ஒரு மாடலிங் தொழிலில் முன்னணியில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு ‘தெகிடி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர், இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன், தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. 

Our Score