full screen background image

“ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் பெண்கள் அமர முடியவில்லையே ஏன்..?” – நடிகை ஜோதிகா கேள்வி..!

“ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் பெண்கள் அமர முடியவில்லையே ஏன்..?” – நடிகை ஜோதிகா கேள்வி..!

’36 வயதினிலே’ படத்தின் நன்றி அறிவிப்புக் கூ்டடத்தில் நடிகை ஜோதிகா பேசும்போது “ஜனாதிபதி, பிரதமர் ஆகிய பதவிகளில் அதிகமான பெண்கள் அமர முடியவில்லையே.. இது ஏன்..” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோதிகா பேசும்போது, “எட்டு ஆண்டுகளுக்குப் பின் நான் ரீ-என்ட்ரி ஆகிய படத்துக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி..!

திருமணத்திற்கு பின்பும் பெண்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்ற கதைக் கருவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்தப் படத்துக்குப் பின் நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்.

பல கோடி பெண்கள் இருக்கும் இந்த இந்திய திருநாட்டில் இதுவரையிலும் இந்திரா காந்தி மட்டுமே பிரதமராக இருந்திருக்கிறார். பிரதீபா பாட்டில் மட்டுமே ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். இந்தப் பதவிகளில் அதிகமான பெண்கள் ஏன் அமர முடியவில்லை என்கிற கேள்வி இந்தப் படத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

இதே கேள்வியை என்னிடமும் கேட்கிறார்கள். உயர்ந்த இடத்துக்கு பெண்கள் வர முடியாமல் போவதற்குக் காரணம் அவர்களின் கணவர்மார்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

கார் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்று கனவு காணும் ஆண்கள் மனைவிகளின் கனவையும் நிறைவேற்ற வேண்டும். நல்ல கணவர் அமைந்து, அவர் ஊக்கம் கொடுத்தால் பெண்களும் முன்னேறுவார்கள்…” என்றார்.

Our Score