full screen background image

“போகிற இடமெல்லாம் ‘ஜூலியட்’ என்றே அழைக்கிறார்கள்..” – நடிகை ஹன்ஸிகாவின் பெருமிதம்..!

“போகிற இடமெல்லாம் ‘ஜூலியட்’ என்றே அழைக்கிறார்கள்..” – நடிகை ஹன்ஸிகாவின் பெருமிதம்..!

நடிகை ஹன்சிகா மோத்வானி.. பெயரை கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும்.

தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும், நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் உதவும் குணமாகட்டும், இவையனைத்துமே ஹன்சிகாவை இன்னும் ஒருபடி மேலே கொண்டு போய் தமிழ் ரசிகர்களிடையே நெருக்கமாக்கியுள்ளது.

ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இவரது ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ஹன்சிகா இந்தப் படம் பற்றி பேசுகையில்.., “2015-ன் இரண்டாம் பகுதியில் நான் நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, ‘புலி’ படங்களின் வருகையால் என் நடிப்பு கேரியர் மிக பெரியதாய் அமையப் போகிறது என்றே எண்ணுகிறேன்.

‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் ஒரு விமான பணிப்பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்.  இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நான் செல்லும் இடமெல்லாம் என்னை ‘ஜூலியட்’ என்றே அழைக்கிறார்கள்,

ஒரு படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கபடுவது எந்த ஒரு நடிகைக்கும் பெருமை மட்டுமல்ல; பெருமிதமான விஷயம்கூட. ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் அந்தப் பெருமித்தை எனக்குத் தந்துள்ளது என்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன்..” என்கிறார் ஹன்ஸிகா என்னும் ஜூலியட்..!

Our Score