full screen background image

ஹீரோயின் அதிதி செங்கப்பாவுக்கு தெரிஞ்ச மூணே மூணு தமிழ் வார்த்தை..!

ஹீரோயின் அதிதி செங்கப்பாவுக்கு தெரிஞ்ச மூணே மூணு தமிழ் வார்த்தை..!

Capital Film Works நிறுவனத்தின் தயாரிப்பாளரான S.P.B. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. இந்தப் படத்தின் ஹீரோயினான டெல்லியை சேர்ந்த அதிதி செங்கப்பா தனது நடிப்பால் இந்தப் படத்தில் அனைவரையும் கவர்ந்து உள்ளார்.

இந்தப் படத்தின் நடித்த அனுபவங்களை பற்றி பேசிய அதிதி செங்கப்பா, “இப்படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது வித அனுபவம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் நான் முதன்முறையாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரத்தின் பெயர் அஞ்சலி. படத்தில் நானொரு தைரியமான, தெளிவான பெண். ஹீரோ அர்ஜுன் எப்படி என்னை குழப்புகிறார் என்பதை வெகு அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா..” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “இரு மொழி படம் என்பதால் நடிப்பதற்கு பெரும் சவாலாய் அமைந்தது. இப்படம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் தமிழ் வசனத்திற்கு பதிலாக தெலுங்கு வசனங்கள் பேசி சொதப்பினேன். இதுவாவது பரவாயில்லை, தமிழில் ஒரு கதாநாயகன். தெலுங்கில் இன்னொருவர். ஒரு சில நிமிடங்களில் இருவருடன் ஒரே முக பாவத்துடன் காதல் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. என் தோழிகள்கூட இதை வைத்து என்னை ரொம்ப ஓட்டுவாங்க. காதல் காட்சிகளில் ஒருவருடனும், சண்டை போடும் காட்சிகளில் இன்னொருவரிடமும் ஈடுபாடுட்டுடன் நடித்தேன். நடிப்புதான்.. தப்பா நினைச்சுகாதீங்க..” என்று   கூறிய அதிதி வெங்கியை பற்றிப் பேசும்போது மட்டும் குலுங்க, குலுங்க சிரிக்கிறார். “வெங்கி அபாரமான திறைமையானவர். உலக தரத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்..” என சிரிப்புடன் கூறினார்.

“உங்களுக்கு தமிழில் தெரிந்த மூணே மூணு வார்த்தை..” என்று கேட்ட பொழுது, “எனக்கு ரொம்ப தமிழ் பேச வராது.. இருந்தாலும் ‘எனக்கு ரொம்ப பசிக்குது’ என்ற மூணு வார்த்தையை நான் அதிகம் பயன்படுத்துவதுண்டு. மிக நேர்த்தியான படங்களை தயாரித்து வரும் Capital Film Works  நிறுவனத்தில் பணி புரிந்தது மிகவும் பெருமையாகவுள்ளது. இயக்குனர் மதுமிதா, மற்றும் தயாரிப்பாளர் S.P.B.சரணுக்கு  எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்..” என்றார் அதிதி செங்கப்பா.    

Our Score