‘கள்ளப்படம்’ சென்சாரில் நல்ல படமானது..! ‘யு’ சர்டிபிகேட்டாம்..!

‘கள்ளப்படம்’ சென்சாரில் நல்ல படமானது..! ‘யு’ சர்டிபிகேட்டாம்..!

இயக்குநர் மிஷ்கினின் பிரதம சீடரான வடிவேல் இயக்கியிருக்கும் ‘கள்ளப்படம்’ சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படத்தில் இயக்குநர் வடிவேல், லட்சுமி பிரியா, ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காஜின் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கே இசையமைத்திருக்கிறார். ஆனந்த் பொன்னிரவன் தயாரித்திருக்கிறார்.

மிஷ்கினின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘Lone Wolf Productions’ சார்பில் ‘கள்ளப்படம்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

‘கள்ளப்படம்’ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பொரு்ததமாக ‘நல்ல படம்’ என்ற பெயரை ரிலீஸுக்கு முன்பேயே பெற்றுவிட்டது இத்திரைப்படம்..!

Our Score