full screen background image

“கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம்தான் முக்கியம்..” – ஐஸ்வர்யா ராஜேஷின் கொள்கை

“கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம்தான் முக்கியம்..” – ஐஸ்வர்யா ராஜேஷின் கொள்கை

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

குஷ்புவின் ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

aaraathu sinam-poster

இதனுடன், ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக ‘ஆறாது சினம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உற்சாகமுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதை தனது கொள்கை என்றும் சொல்கிறார்.

Our Score