‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்த நடிகர்கள்

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்த நடிகர்கள்

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு வில்லனாக பிரபல இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன்  திலீப்குமாரின் இயக்கத்தில்  ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ் என்ற நடிகையும் இதில் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் 3 வில்லன்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. அதில் ஆன்குர் அஜித் விகால், லிலிபுட் பரூக்கி என்ற பாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள். மூன்றாவது வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார் என்று சென்ற வாரம் அறிவித்தார்கள்.

தற்போது மேலும் ஒரு அப்டேட்டாக இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார் என்று நேற்றைக்கு அறிவித்தார்கள்.

முன்னொரு காலத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒரு படம் துவங்கும் நிலை இருந்தது. ஆனால் கதை விஷயத்தில் விஜய்க்குத் திருப்தி இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு நடிகராக செல்வராகவன் தற்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

செல்வராகவன் ஏற்கெனவே ‘சாணி காகிதம்’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷூடன் நடித்தி வருகிறார். அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் நடிப்பிலும் இறங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யாவுக்கு செல்லவிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தற்போது சென்னையிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 
Our Score