full screen background image

“20 வருஷத்துக்கு அப்புறம் நான் கேட்ட சிறந்த கதை இதுதான்..” – நடிகர் விஜய்யின் பாராட்டு..!

“20 வருஷத்துக்கு அப்புறம் நான் கேட்ட சிறந்த கதை இதுதான்..” – நடிகர் விஜய்யின் பாராட்டு..!

“20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன்” என்று நடிகர் விஜய் தன்னிடம் கூறியதாக தயாரிப்பாளர் தில்’ ராஜூ பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் விஜய்யின் அடுத்தப் படமான ’விஜய்-66’ படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குவதும், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த ’விஜய்-66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, “20 வருடங்களுக்கு பிறகு ’பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று ஒரு நல்ல கதையைக் கேட்டு இருக்கிறேன்” என்று விஜய் என்னிடம் சொன்னார். இந்த ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும்..” என்று கூறியுள்ளார். மேலும், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்தால் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸாகும்..” என்று தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.

Our Score