நடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது

நடிகர் விஜய்-இயக்குநர் வம்சி பைடிபல்லி-‘தில்’ ராஜூ கூட்டணி உறுதியானது

நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு திரையுலகத்தின் தில்லான தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது.

இந்த விஜய்-66 வது படத்தில் மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் இணைந்துள்ளனர்.

படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்.

இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இத்திரைப்படம் பற்றிய செய்தி உறுதியாகியுள்ளது.

Our Score