full screen background image

பரதன் இயக்கும் விஜய்யின் 60-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது..!

பரதன் இயக்கும் விஜய்யின் 60-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது..!

இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 60’ படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது.

‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி-60’ படத்தின் படப்பிடிப்பு இன்று(11-04-2016) பூந்தமல்லி E.V.P. ஸ்டுடியோவில் பூஜையுடன்  தொடங்கியது.

இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்தி’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் சதிஷ், இந்தப் படத்திலும் விஜய்யுடன் இணைகிறார்.. மற்றும் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ‘மைனா’ சுகுமார், பாடல்கள் – கவிப் பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – பிரவின் கே.எல்., கலை இயக்குனர் –  பிரபாகர், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, உடை வடிவமைப்பy   –  சத்யா N.J,, புராஜெக்ட் ஹெட்   –   A.ரவிச்சந்திரன். ஆப்ரேடிங்  ஹெட்   –  குமார்.

இன்றும் நாளையும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Our Score