full screen background image

இயக்குநர் நெல்சனிடம் நடிகர் விஜய் சொன்ன அறிவுரை..!

இயக்குநர் நெல்சனிடம் நடிகர் விஜய் சொன்ன அறிவுரை..!

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் நடிக்கிருக்கிறார் நடிகர் விஜய். இந்தப் படத்தை நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்தின் உருவாக்கத்திற்காக இயக்குநர் நெல்சனுக்கு, நடிகர் விஜய் சில அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறாராம்.

“படம் மொத்தமும் 55 நாட்களில் முடித்தே ஆக வேண்டும். சிவகார்த்திகேயன் படம் போல விட்டுவிட்டு இழுக்கக் கூடாது” என்பதை ஒரு கண்டிஷன்போல் சொல்லிவிட்டாராம் விஜய்.

இதேபோல் நெல்சன் கொடுத்த முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துப் பார்த்துவிட்டு “இது விஜய் படம் மாதிரியிருக்கணும். அதுனால எனக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கரெக்சன் பண்ணிக் கொண்டு வாங்க” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல் நெல்சன் செய்து கொண்டு வந்த கரெக்சன்களையும் பார்த்து “ஓகே” சொல்லிவிட்டாராம் நடிகர் விஜய்.

இனிமேல் ஆர்ட்டிஸ்ட் செலக்சன், ஷூட்டிங் லொகேஷன் தேர்வு மற்ற இத்யாதிகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு மார்ச் 15-க்குப் பிறகு அல்லது ஏப்ரல் துவக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Our Score