துபாயில் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூர்யா..!

துபாயில் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூர்யா..!

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகிய ‘சி-3’(சிங்கம் 3) சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தின், முதல் சிறப்பு காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து, ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 

துபாயில் ஹயாட் ரீஜென்சியில் உள்ள ஸ்டார் கலேரியா சினிமாஸ் அரங்கத்தில் இந்த முதல் காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

surya-dubai

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படம் குறித்து பேசியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்ன சூர்யா, அவர்களுடன் சேர்ந்து படத்தையும் பார்த்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.

கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான ‘சிங்கம்-2’ படத்தின் தொடர்ச்சியாகவும் ‘சிங்கம்’ என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரும் அணி வரிசையில் 3-வது திரைப்படமாகவும் ‘சி-3’ வெளிவந்திருக்கிறது.

அதிரடி காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த திரைப்படமானது, கடந்த 9-ம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் காட்சியாக திரையிடப்பட்டது.

surya-dubai

இத்திரைப்படத்தின் பெயரைப் போலவே, ‘துரைசிங்கம்’ என்ற பெயரில் அதிரடி காவல்துறை அதிகாரியாக வரும் சூர்யா, ஊழல் பேர்வழிகளை அழித்தொழித்து நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் அதிரடியாக களம் காண்கிறார்.

இத்திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் மற்றும் பெண் மூவி நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் மசாலா திரைப்படமானது, இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 5-வது படமாகும்.

அதிரடி காட்சிகள் நிறைந்த பொழுதுபோக்கு சித்திரமாக உள்ள இத்திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்திருக்க, ப்ரியனின் ஒளிப்பதிவு படத்தை பிரமிக்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.