full screen background image

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே!

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே!

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Our Score