நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தடை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை புதிய படங்களில் நடிக்க வைக்கவோ, இயக்கம் செய்யவோ தடை விதித்துள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதற்குக் காரணம் பிரபல தயாரிப்பாளரான ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய கடனை எஸ்.ஜே.சூர்யா திருப்பித் தராததுதானாம்.

2014-ம் ஆண்டில் ‘இசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தின் உருவாக்கத்தின்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் 5 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

‘இசை’ படம் வெளியாகி தோல்வியடைந்ததை அடுத்து.. எஸ்.ஜே.சூர்யாவால் அடுத்து படங்களைத் தயாரிக்க முடியவில்லை. மாறாக படங்களில் நடிக்கத் துவங்கினார்.

ஆனால், ஞானவேல்ராஜாவிடம் வாங்கிய 5 கோடியை இன்னமும் அவர் திருப்பித் தரவில்லையாம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் கொடுத்ததையடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்வரையிலும் எஸ்.ஜே.சூர்யாவை தங்களது சங்க உறுப்பினர்கள் எந்தப் படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

 
Our Score