தமிழ் நடிகர்களில் ட்விட்டரில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முதன்மையானவர் சிம்பு. ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ்களை பெற்றிருக்கிறார்.
பல முக்கியமான விஷயங்களை டிவிட்டரில் பதிவு செய்து வெளியுலகத்திற்கு தெரிவித்திருக்கிறார். தனது மக்கள் தொடர்பு சாதனமாக இதுநாள்வரையிலும் அதை பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் தான் இனிமேல் ட்விட்டரில் தொடரப் போவதில்லை என இன்றைக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி.
இன்று முதல் எனது ட்விட்டர், எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வாகிக்கப்படும். தேவைப்பட்டால் மட்டுமே நான் டிவிட்டரில் என் கருத்தை பதிவு செய்வேன்.
ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பதுதான். அவர்களுடனான என்னுடைய தொடர்பு வெற்றி படம் மட்டும்தான். தவிர இதைப் போன்ற சமூக வலைத்தளங்களில் இல்லை என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.
ஐயையோ.. பாவம் மீடியாக்கள்.. தங்களுக்கு தீனி போடுற ஒருத்தர் விலகுறது எத்தனை கஷ்டம்ன்னு அவங்களுக்குத்தான் தெரியும்..
சிம்பு அண்ணே.. பயப்படாம திரும்பி வாண்ணே.. நீயில்லாமல் நாங்க எப்படி..?









