வர வர நடிகர் சிம்பு நடிகராக தெரியவில்லையென்றாலும் பின்னணிப் பாடகராக பெருமளவு பேசப்படுவார் போலத் தெரிகிறது. கடைசியாக ‘சகாப்தம்’ படத்தில்கூட ஒரு பாடலை பாடியிருந்தார்.
தொடர்ச்சியாக பல படங்களில் பாடிக் கொண்டிருக்கும் சிம்பு இப்போது ‘அப்பாடக்கர்’ படத்திற்காகவும் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி – திரிஷா நடிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கி வரும் இப்படத்தில் கூடுதல் சலசலப்பைக் கூட்ட சிம்புவைக் கூப்பிட்டு ஏழரையைக் கூட்டியிருக்கிறார்கள்.
சிம்புவுக்கு மிகவும் பிடித்தமான குத்து பாடல் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கிறது. ‘குத்து ஸாங்கும்மா நீயி.. ஹிட்டு ஸாங்கும்மா நீயி..’ என்று தமிழ் பெருமையோடு துவங்கும் இந்தப் பாடலை சிம்பு சூப்பராக பாடியிருக்கிறாராம். தமன் இசையமைத்திருக்கிறார்.
ஏதோ படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்தால் சரிதான்..!