நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகனும், நடிகை ஸ்ரீபிரியாவின் அக்காள் மீனாட்சியின் மகனுமான நடிகர் சிவாஜி தேவ் என்னும் சிவக்குமாருக்கும், நடிகை சுஜா வாருணிக்கும் இன்று காலை அடையாறு கிரெளன் பிளாஸா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
இன்று மாலை அதே ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Our Score