full screen background image

சதீஷ் நாயகனாக நடிக்கும் 2-வது படம் துவங்கியது..!

சதீஷ் நாயகனாக நடிக்கும் 2-வது படம் துவங்கியது..!

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநரான வெங்கியின் இயக்கத்தில், சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

புரொடக்‌ஷன் No-3’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்க, சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – VBR, இணை தயாரிப்பு – முரளி கிருஷ்ணன், படத் தொகுப்பு – சித்தார்த், கலை இயக்கம் – G.துரைராஜ், உடைகள் வடிவமைப்பு – கிருத்திகா சேகர், பத்திரிகை தொடர்பு – சதிஷ் – சதிஷ் குமார்(AIM), விளம்பர வடிவமைப்பு – தண்டோரா.

படத்தின் நாயகனான சதீஷ் நாயகனாக நடிக்கும் 2-வது படம் இது. ஏற்கெனவே சென்ற வருடம் சதீஷ் நாயகனாக நடித்து வெளியான ‘நாய் சேகர்’ படம் வெற்றியடைந்துள்ளது.

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ‘ரிபீட்'(தெலுங்கு) ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.விஜய் பாண்டி மூன்றாவதாகத் தயாரிக்கும் படம் இது.

இந்தப் படத்தின் இயக்குநரான வெங்கி, பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த இந்தப் புதிய படத்தின் பூஜை நிகழ்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score