full screen background image

“நடிகர் சங்கத்தின் புகாரில் போடப்பட்ட FIR கேன்ஸல்…” – நடிகர் ராதாரவியின் காட்டமான பதில்..!

“நடிகர் சங்கத்தின் புகாரில் போடப்பட்ட FIR கேன்ஸல்…” – நடிகர் ராதாரவியின் காட்டமான பதில்..!

சென்னையை அடுத்தத் தாம்பரம் அருகில் நடிகர் சங்கத்திற்காக வாங்கப்பட்டிருந்த நிலத்தை நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு அனுமதி இல்லாமல் நடிகர்கள் சரத்குமாரும், ராதாரவியும் விற்றுவிட்டதாகவும், அதில் கிடைத்த பணத்தை சங்கத்தில் வரவு வைக்காமல் அவர்களே வைத்துக் கொண்டதாகவும் சென்ற முறை நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் மிக முக்கிய குற்றச்சாட்டாக விஷால் தரப்பினரால் எழுப்பட்டிருந்தது.

இது பற்றி காவல்துறையில் புகார் தரப்பட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சரத்குமார், ராதாரவி மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. இப்போது இந்த முதல் தகவல் அறிக்கை கைவிடப்பட்டுள்ளதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “நானும் சரத்குமாரும் சேர்ந்து நடிகர் சங்கத்துல ஊழல் செஞ்சுட்டோம்ன்னு பெரிசா கூப்பாடு போட்டாங்க. போலீஸ்ல புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். போட வைச்சாங்க..!

உடனேயே மீடியால ஒரே பரபரப்பு.. சரத்குமார், ராதாரவி அரெஸ்ட்டாகப் போறாங்களாமே.. எப்போ.. எப்போன்னு ஒரே தவிப்பு. நான் அப்படியேதான் இருந்தேன். நான் இது மாதிரியெல்லாம் நிறைய பார்த்தவன். எனக்கு ஒண்ணுமில்லை. சாதாரணமாத்தான் இருந்தேன். ஆனால், இப்போ என்னாச்சு..? அது பத்தி பேச்சு, மூச்சையே காணோம்.

ஏன்..? அதில் உண்மையே இல்லையே..! அந்த நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணம் 8 லட்சத்தைக் காணோம்ன்னு சொன்னாங்க. மொதல்ல அந்த நிலத்தை விக்கவே முடியாது. ஏன்னா அது நடிகர் சங்கத்தோட சொத்து. அந்தப் பணம் நடிகர் சங்கத்தின் அக்கவுண்ட்டுலதான் இருக்கு. முதல்ல அது எங்களுக்கு தெரியலை.. இப்போ ஹைதராபாத்வரைக்கும் போயி அந்த பேங்கோட தலைமை ஆபீஸ் ரெக்கார்டு தேடிக் கண்டுபிடிச்சா அதுல அந்த 8 லட்சம் ரூபாய் இருக்கு. அதையெல்லாம் இப்போ காட்டினது எங்க மீது போட்ட அந்த எஃப்.ஐ.ஆரே இப்போது கேன்ஸலாயிருச்சு..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score