full screen background image

நடிகர் பிரசாந்த் வெளியிட்ட பட டைட்டில்..!

நடிகர் பிரசாந்த் வெளியிட்ட பட டைட்டில்..!

ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சரவணன் தயாரித்துள்ள படம் ‘டூ ஓவர்’. 

இந்தப் படத்தில் மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பு – கே.வி.செந்தில்,  இணை இயக்கம் – ஏ.பி.சிவா, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், இயக்குநர் ஷார்வி இந்தப் படத்தை எழுதி, இயக்குகிறார்.

சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது இந்த ‘டூ ஓவர்’..! இந்தப் படம் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் தயாராகிறது.

சமூகப் பிரச்சினைகளை உள்ளடக்கிய கதையில் இந்த ‘டூ ஓவர்’ படம் உருவாகியுள்ளது. வேலையில்லாத படித்தவர்களின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

இந்தப் படத்தின் டைட்டிலை நடிகர் பிரசாந்த் இன்று வெளியிட்டார்.

 
Our Score