full screen background image

இசை வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்..!

இசை வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுத கதாநாயகன்..!

ஸ்ரீகிருஷ்ணா  டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரித்திருக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை.’  

இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோ சங்கர், லொள்ளு சபா சேஷு ஆகியோரும் நடித்துள்ளனர். மோகன் ஜி. இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் பிரஜன் பேசும்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் யாரும் விழாவிற்கு வராதது கண்டு வருத்தப்பட்டு மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

அவர் பேசும்போது, “இந்த படம் வெற்றிப் படமாக ஆக வேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் ஒப்புதல் கேட்டு அவர்களும் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டோம். விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.

நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படம் சிறப்பாக இருக்கும். பாடல்கள்  மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.  எனது நண்பர்களாக இருக்கும் சில நடிகர்கள் மட்டும் வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். இனிமேல், தயாரிப்பாளர் சங்கம் இதுபோல் நடக்காமல் ஒரு வரைறைப்படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று மாலை நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை ஆதரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்காக பல்வேறு சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்த்து. கூடவே தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. இதனால்தான் இந்த பட விழாவில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score