கடந்த சில நாட்களாக கிசுகிசுவாக பேசப்பட்டு வந்த விஷயம் இன்று உண்மை என்றாகிவிட்டது.
நடிகர் பிரபுதேவாவிற்கு திருமணம் நடந்தேறிவிட்டதாம். அவர் திருமணம் செய்திருக்கும் பெண்ணின் பெயர் ஹிமானி. அவர் ஒரு ‘பிஸியோதெராபிஸ்ட்’ என்கிறார்கள்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரபுதேவா ஒரு ஹிந்திப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று இடுப்பு வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதற்கு சிகிச்சையளிக்க வந்தவர்தான் இந்த டாக்டர் ஹிமானியாம்.
அந்தப் பழக்கம் காதலாக மாற.. “இந்த மே மாதம் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் அவர்களுடைய குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்…” என்று சொல்லியிருக்கிறார் பிரபுதேவாவின் சகோதரரான ராஜூ சுந்தரம்.
இப்போது பிரபுதேவா வசித்து வரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்துவதாகக் கேள்வி..!