full screen background image

“சசிகலாவின் மேக்கப்பை பார்த்து கவர்னருக்கு 2 நாட்கள் காய்ச்சல்…” – நடிகர் மன்சூரலிகானின் கிண்டல்..!

“சசிகலாவின் மேக்கப்பை பார்த்து கவர்னருக்கு 2 நாட்கள் காய்ச்சல்…” – நடிகர் மன்சூரலிகானின் கிண்டல்..!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ராகேஷ் சவந்த்  தயாரித்து, இயக்கியிருக்கும் புதிய படம் அமாவாசை. இதில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் – சையது அகமது உள்ளிட்ட பல பாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்த ‘அமாவாசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சூர்யா சின்ஹா, இயக்குநர் ஓம்கார், அய்யனார் வீதி ஜிப்ஸி N.ராஜ்குமார், ‘செனனை டூ பாங்காக்’ இயக்குநர் சந்தோஷ், இசையமைப்பாளர் யு.கே.முரளி, பத்திரிகையாளரும், படத் தொகுப்பாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ், ஜி ப்ளஸ் ராஜேஷ் , மற்றும் இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களான ஜெய் ஆகாஷ், ரிஷப், நடிகைகள் யாழினி, ரூபி,  பங்கஜ், தேவராஜ், ஏ.எப். புரடக்ஷன்ஸ்  எம்.எம் ஆசிப், தயாரிப்பாளர் இந்து,  ஒளிப்பதிவாளர் தேவராஜ்,  கானா பிரபாகரன், பெண்கள் நலம் – திலகவதி, ஸ்ரீநிதி, தயாரிப்பாளர் ராகேஷ் சாவந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Aamavaasai-audio-Launch

விழாவில் பேசிய நடிகர் மன்சூரலிகான், “இங்க இந்த ‘அமாவாசை’ பட பேனர்களில் ‘அம்மாவின் நல்லாசியுடன்’ என்று சொல்லி ஜெயலலிதாவின் போட்டோவை போட்டு இருக்காங்க… அவங்க நல்ல ஆட்சிதான் பண்ணினாங்க. ஆனா அவங்ககூட இருந்தவங்க அவங்களை கொன்னுட்டதா இப்போ சொல்றாங்க..

அவங்க 4 நாயை வளர்த்திருந்தால்கூட கொன்றவரை கடித்து கால் அடியில் போட்டிருக்கும் . ஆனால், விசுவாசம் இல்லாதவங்களாலதான் இப்போ பிரச்சினை.. எடப்பாடியா… காட்பாடியா.. ஒரே குழப்படியா இருக்கு… கூவத்தூர் பிரச்சினை இதோட முடிஞ்சுடுமுன்னு நம்பலாம். கவர்னர் கூப்பிட்டிருக்கிறதா தகவல்கள் வருது.

பிரதமர்  மோடியின் டீமானிடேஷன் பிளானால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுபாடுகளால் தமிழ் சினிமா தத்தளிக்கிறது . அதுக்கு சினிமாக்காரங்க ஒன்று சேர்ந்து காம்பன்சேஷன் கேட்கணும். ஆனா, எந்த நாயும் அதைக் கேட்க மாட்டேங்குது. சினிமா தொழிலாளர்களுக்கு பேட்டாவே செக்கா தர்றேங்கறாங்க.

கேஷ் லஸ் இந்தியா, பேஸ் லஸ் இந்தியா ஆயிடும்ங்கறதை யாருமே சொல்ல மாட்டேங்கறாங்க.. நாம பொண்ணுங்களுக்கு தனலட்சுமி, பாக்கியலட்சுமின்னு பேர் வைக்கிறது தனம் வீட்டிலே இல்லாம இருக்கக் கூடாது அப்படிங்கறதுக்காகத்தான்..

கனிமொழி அம்மா வீட்டிலேயே கன் எடுத்துட்டு போய் மிரட்டுறான் திருடன். அங்கேயும் கேஷ்லஸ். எல்லாத்துக்கும் காரணம் மோடி. அவரு பொண்டாட்டிய மறைச்சு வச்சித்தான் பதவிக்கு வந்தவராம். அதனால இப்போ பணத்தையும் மறைக்க பார்க்கிறாரு…

ஆயிரம் ரூபா நோட்ட பார்க்கவே முடியலை.. இரண்டாயிரம் நோட்டுக்கு சில்லறை மாத்த முடியலை… காரணம் மோடியின் கேஷ் லஸ் இந்தியா. மாணவர் புரட்சிக்கு சப்போர்ட் பண்ணிய மாதிரி மீடியாக்கள் இந்த மாதிரி விஷயங்களையும் மக்கள்ட்ட கொண்டு போகணும்.

இந்த நிலையில தமிழ்நாடு நிலையான ஆட்சி இல்லாமல் தவிக்குது. கவர்னர் முன்னமே ஆட்சியமைக்க கூப்பிட்டிருப்பாரு…. இந்தம்மா, அதான் நம்ம சின்னம்மா, அரை இன்ச்க்கு மேக்கப் போட்டுட்டு போயி நின்னதைப் பார்த்து ‘ப்பா’ன்னு பயந்தவர்  ரெண்டு நாள் காய்ச்சல்ல படுத்துட்டாரு.

இங்க ஜெய் ஆகாஷ் நடிக்கும் இன்னொரு படத்தோட பெயரைச் சொன்னாங்க… ‘ஆமா நான் பொறுக்கிதான்’ என்று. இங்கு  நிறைய விஷயம் பொறுக்க வேண்டியிருக்கு. நான்கூட ஜல்லிகட்டு போராட்டத்திற்கு போய் குப்பைகளை பொறுக்கினேன்.

இப்போ எம்.எல்.ஏ.க்களை பொறுக்கிட்டிருக்காங்க. கோஷ்டி, கோஷ்டியா… ஒரு வழியா பொறுக்கி முடிச்சு.. எடப்பாடியோ, காட்பாடியோ,  கொளப்பாடியோ குழப்படியில்லாமல் யாரோ வாங்க.. தமிழ்நாடு டெட் பாடி ஆகுறதுக்குள்ள…!

ஏன்னா, 2 மாசமா  நீடிக்கும் பல பிரச்சினைகளில், தமிழ்நாட்டை அன் ரெஸ்ட்லேயே வச்சிருக்காங்க.. அதனால சொல்றேன். பாத்ரூம்லகூட இப்போல்லாம் சிசிடிவி வச்சிருக்காங்க… ஆனா போயஸ் கார்டன்லயும், அப்பல்லோ ஹாஸ்பிடல்லயும் கேமிராவே இல்லையாம். இத எப்படி நம்புறது..?  

இந்தப் பட ஆடியோ விழா இப்போ தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கிற இந்த நேரத்துல நடக்குறது சந்தோஷமா இருக்கு.

‘அமாவாசை’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருந்தாலும் படம் முழுக்க பவுர்ணமியா பளிச்சுன்னு நிறைய நடிகைகள் பங்கு பெற்றிருப்பதே இந்தப் பட வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. இந்தப் படத்தோட தயாரிப்பாளரும்,  இயக்குநரும் ஒருத்தரேதானம். இந்தி பட உலகில் ராஜ்கபூர் மாதிரி நிறைய பேர் தயாரிப்பாளர் கூடவே, இயக்குநர். அதே மாதிரி இங்கயும் நிறைய பேர் வரணும்.

மெரீனா கடற்கரையும் ஜல்லிக்கட்டு போராட்ட களமும் மாதிரி, கூவத்தூரும் நம்ம ஊர் எம்.எல்.ஏ.க்களும் மாதிரி.. அமாவாசைன்னு இந்தப் படத்துக்கு  பேர் வச்சாலும் பெளர்ணமியா பளபள பெண்கள் பங்கு பெரும் காட்சிகள் வறட்சியில தத்தளிக்கும் தமிழ்நாட்டுக்கு ஏற்ற மாதிரி இப்படத்தில் நிறைய இருக்கு.

என்னமோ… இனியாவது நல்லது நடந்து திரையுலகமும், தமிழகமும் வாழ வேண்டும்… இந்த அமாவாசை படமும் திரையில் ஓட வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்….” என்று கூறி அமர்ந்தார்.

Our Score