இஷான் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமரர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமார் மகனுமான துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் தயாரிக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.
இந்தப் படத்தில் நடிகர் பிரபுவும், நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.லக்ஷ்மண் குமாரும், படத் தொகுப்பை ரிச்சர்ட் கெவினும், கலையை எம்.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ்.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர்.எஸ்.சிவாஜியும் கவனிக்கிறார்கள். பி.ஆர்.ஓ. – டைமண்ட் பாபு.
இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கப் போகிறாராம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தான் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே இதில் நடிக்க ஒத்துக் கொண்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாகச் செய்தி..!









