full screen background image

“தலாய்லாமாவை சந்தித்தது ஏன்..?” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்..!

“தலாய்லாமாவை சந்தித்தது ஏன்..?” – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்..!

அப்துலக்லாம் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோ திபெத்தின் தலைவரான தலாய்லாமா நேற்று சென்னை வந்திருந்தார்.

அப்போது நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் அவரைச் சந்தித்து பேசினார்கள்.

திபெத் நா்ட்டின் பெரும்பாலான பகுதிகளை தற்போது சீனா ஆக்கிரமித்துள்ளது. அந்த நாட்டை சுதந்திர நாடாக ஆக்கும்படி திபெத்திய மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திபெத்தில் முழுக்க முழுக்க பெளத்த மக்களே வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக தலாய்லாமா என்கிற பெயரில் ஒருவர் வழி வழியாக இருப்பார். இது காலம், காலமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் 1945-களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தலாய்லாமா தற்போது திபெத்திற்கு வெளியே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேலத்தில் ஒரு தனி இடத்தில் தலைமைச் செயலகம் போல அலுவலகம் அமைத்து அமர்ந்திருக்கிறார்.

சீனா தான் ஆக்கிரமித்திருக்கும் திபெத்திய பகுதி மக்களுக்காக தானே ஒரு தலாய்லாமாவை உருவாக்கி அவரை அங்கே மதத் தலைவராக பிரகடனப்படுத்தியிருக்கிறது.

இந்தியா முதலில் இருந்தே தனி திபெத் நாட்டை ஆதரித்து வருகிறது. இந்த தலாய்லாமா சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி வந்த பிறகு, ஒரு நாட்டின் தலைவருக்கான மரியாதையை இந்தியா இப்போதும் இவருக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தது ஏன் என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கான பதிலை நடிகர் கமல்ஹாசன் இன்றைக்கு ஒரு அறி்ககை மூலம் வெளியிட்டிருக்கிறார்.

அது இங்கே :

Today morning I met The Dalai Lamaji.

Have admired his resillience and purpose. Being a fan of Gandhiji it is not to too far fetched to become his admirer. Inspite of the fact that I am rationalist and hence not spiritually bent my meeting was invigorating and felt purposeful. 

My lack of interest in matters of things spiritual in nature was matched by his disinterest in cinema. “I have not watched a single movie not even Television” he told me with a smile. 

Yet he opined that I could use my craft and medium to propagate the great philosophy offered to the world by India: Ahimsa. 

I confirmed my faith in Ahimsa and said I will venture soon in that direction. 

For a man of his position he indulged in small talk with abandon a sign of a man who had no worldly worries. 

Above all he loved the company of strangers. He reminded me of Jain Tamil poetry 2000 year old.

“Everywhere is my town; All are my kin.”

“யாதும் ஊரே யாவரும் கேளிர்.”

– Kamal Haasan
Our Score