‘வானவில் வாழ்க்கை’யில் வலம் வரும் நடிகர் ஜோஸ் செல்வராஜ்..!

‘வானவில் வாழ்க்கை’யில் வலம் வரும் நடிகர் ஜோஸ் செல்வராஜ்..!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படமான ‘வானவில் வாழ்க்கை’  படத்தில் ட்ரம்ஸ் கலைஞராக நடித்திருக்கும் ஜோஸ் செல்வராஜ் தனது இசை பயணத்தையும், நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும் சொல்கிறார்.

“நான் கொடைக்கானல் சர்வதேச பள்ளியில் இசை பயின்றேன். சிறு வயது முதலே ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பிதேன். பின், லண்டன் ராயல் ஸ்கூல் ஆஃப் மியுசிக் சென்று அங்கு Grade-5 முடித்துள்ளேன். தபேலா வாசிக்கவும் கற்றுக் கொண்டேன்.

வானவில் வாழ்க்கை படத்தில் பையாஸ் என்ற கல்லூரி மாணவனாக வருகிறேன். என்னுடைய நிஜ குணாதிசியங்கள் இந்தக் கேரக்டருக்கு ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எனக்கு மிக எளிமையாய் இருந்தது. முதலில், ஜேம்ஸ் சார் என்னை நடிக்க சொன்னபொழுது  தயங்கினேன். ஒவ்வொரு காட்சியையும் அவர் நடிக்க சொல்லித் தருவார். பின்பு நான் அதைப் பார்த்து என்னுடைய அனுபவத்தில் நடித்தேன். இந்த ஒரு படத்தில் நடித்த அனுபவத்தின் காரணமாய், தற்பொழுது நடிப்பின் மீதே எனக்கு அதீத ஆர்வம் வந்துள்ளது. கானா பாடலுக்கு வாசித்த அனுபமும் புதியதாய் இருந்தது.

பாட்டு, ஆட்டம், நடிப்பு மற்றும் இசைக் கருவி வாசித்தல் என இந்தப் படத்தில் முழு அனுபவமும் இனிமையாகவே கழிந்தது. இப்படத்திற்காக ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி சென்று இருந்தோம். என் வாழ்வில் முதன் முறையாக அந்த ஸ்டுடியோவை பார்த்தேன்.  அங்கிருந்த செட்டுகளை கண்டு வியந்தே போனேன். இப்படி பல புதிய அனுபவங்களை எங்களுக்கு அளித்தது ‘வானவில் வாழ்க்கை’.

முழுக்க முழுக்க இசையை மையமாக கொண்ட ‘மியுசிக்கல் ஃபிலிம்’ இது. பலரது கல்லூரி வாழ்கையை நினைவுக்கு கொண்டு வரும் இப்படம் ஜேம்ஸ் சாரின் கனவு. அக்கனவு நினைவேற நானும் ஒரு அங்கமாய் இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..” என வியப்புகள் நிறைந்த புன்னகையுடன் கூறுகிறார் ஜோஸ் செல்வராஜ்.

Our Score