full screen background image

சூப்பர் ஸ்டார் ரஜினியையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் நடிகர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியையே ஆச்சரியப்பட வைத்திருக்கும் நடிகர்..!

ஆனானப்பட்ட டைரக்டர்களையே நடிப்புத் திறமையால் வசீகரிக்க சிலரால்தான் முடியும். ஒரு நடிகருக்கு ஆக்‌ஷன் சொல்லிவிட்டால் அடுத்த நொடி அந்த கேரக்டராக  மாறுவது சிலருக்குத்தான் வாய்த்திருக்கிறது.

“என்ன ஜான்.. அடுத்த செகண்ட் அப்படியே மாறுறீங்களே..?” என ‘கபாலி’ ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினியையே ஆச்சரியப்பட வைத்தவர்  ஜான் விஜய்.

john-vijay-2

‘வில்லத்தனமான கேரக்டர்.. காமெடி கேரக்டர்.. இல்ல.. இல்ல.. ரெண்டும் கலந்த கேரக்டரா… கூப்பிடுங்கப்பா ஜான் விஜய்யை’ என்று கோடம்பாக்கத்து டைரக்டர்களின் இப்போதைய மோஸ்ட் வான்டட் ஆக்டர் இவர்தான்.

john-vijay-3

இப்போதைக்கு இருபது படங்கள் கைவசம். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அத்தனை மொழிகளிலும் பிஸியான ஆக்டர். தமிழில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’, அதர்வா நடிக்கும் ‘செம போதை ஆகாது’, சேது நடிக்கும் ‘ஆளுக்கு பாதி 50/50’, அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘உள்குத்து’, அசோக் செல்வனின் ‘கூட்டத்தில் ஒருவன்’, மா.கா.பா நடிக்கும் ‘கடலை’ என வரிசை கட்டி நிற்கின்றன இவர் நடித்த படங்கள்.

john-vijay-1

வில்லனாக அறிமுகமாகிய  ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பின்னாட்களில் அத்தனை கேரக்டர்களையும் தங்களது பன்முக ஆளுமையால் கலந்து கட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்கள். இந்தப் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ளவே விரும்புகிறாராம் இந்த ‘நடிப்புத் திலகம்’ ஜான் விஜய்.

சாதித்துவிடுவார் என்றே நம்புகிறோம்..!

Our Score