‘சிக்ஸ் பேக்’ நடிகர்கள் பட்டியலில் இணைந்தார் நடிகர் ஜெய்..!

‘சிக்ஸ் பேக்’ நடிகர்கள் பட்டியலில் இணைந்தார் நடிகர் ஜெய்..!

SK ஸ்டியோஸ் தயாரிப்பில் அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் ‘வலியவன்’. ஜெய் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.

‘வலியவன்’ படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் அழகம் பெருமாள், ‘பண்ணையாரும் பத்மினியும்’ பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தில் தனது கதாபாத்திரத்தின் தன்மைக்கு தேவைப்பட்டதற்காகவும் நடிகர் ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

DPP_0095

ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் மிகவும் சிரமப்பட்டு தனது உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை மெருகேற்றி சிக்ஸ் பேக் வரவைத்துள்ளார் ஜெய்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

படம், மிக சிறப்பாக வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகர் ஜெய், ‘வலியவன்’ படத்திற்கு தொடர்ந்து 24 மணி நேரம் டப்பிங் பேசி முடித்துள்ளார்.  படம் விரைவில் வெளியாகவிருக்கிறது..

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன்

தயாரிப்பு – SK STUDIOS

ஒளிப்பதிவு – B. தினேஷ் கிருஷ்ணன்

இசை – டி.இமான்

கலை – ராஜா மோகன்

படத்தொகுப்பு – சுபாரக்

பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா

நடனம் – பிருந்தா, சுசித்ரா

சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சிவா

தயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்

Our Score