தமிழ்த் திரையுலகத்தில் முக்கியமான இளம் நடிகரான ஹரீஷ் கல்யாணுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது. இத்தகவலை அவரே தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இந்த படத்தை தொடர்ந்து, ‘அரிது அரிது’, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’, ‘பியர் பிரேமா காதல்’ ‘இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘ஓ மணப்பெண்ணே’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
சமீப மாதங்களாகவே நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு இவரது பெற்றோர் திருமணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இவரது திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்றைக்கு தன்னுடைய திருமண அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஹரீஷ் கல்யாண்.

தனது எதிர்கால மனைவியான நர்மதா உதயக்குமாருடன் கையுடன் கை கோர்த்தபடி உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
