full screen background image

டார்லிங் வெற்றி. ரசிகர்களுக்கு நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றி..!

டார்லிங் வெற்றி. ரசிகர்களுக்கு நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றி..!

‘ஐ’, ‘ஆம்பள’ என்ற இரண்டு ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் வெளியான ‘டார்லிங்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. டேவிட்-கோலியாத் கதையை மீண்டும் மேடை ஏற்றியது போல் அமைந்துள்ளது என திரையுலகம் கூறி வருகிறது.

இதனால் மிகப் பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார், ‘டார்லிங்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார். அதே வேளையில், தனது குடும்பத்திற்கே உண்டான பணிவுடனும், அமைதியுடனும் ரசிகர்களுக்கு தனது நன்றியினை வெளிப்படுத்தியுள்ளார்.

“எனக்கு தங்கள் ஆதரவை, அன்பை அளித்து வரும் ஊடக மற்றும் ரசிகர் நண்பர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. நான் நடித்துள்ள ‘டார்லிங்’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஆதரவு என்னை நெகிழ செய்கிறது.

பெரும் மகிழ்ச்சியின் கூடவே, நல்ல படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற பொறுப்பையும் தந்துள்ளது. இந்தப் பொறுப்பை.. எனது ரசிகர்களின் நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பாற்றுவேன். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்..” என நம்பிக்கையோடு கூறினார் G.V. பிரகாஷ் குமார்.

Our Score