‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ தமிழில் ரீமேக் ஆகிறது..!

‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ தமிழில் ரீமேக் ஆகிறது..!

சென்ற ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ என்ற நகைச்சுவை படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

சந்தீப் கிஷன், ராகுல் ப்ரீத் சிங் ஹீரோ ஹீரோயினாக நடித்திருந்த ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ படத்தை மெர்லபகா காந்தி எழுதி, இயக்கியிருந்தார். இப்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் ‘யாகவராயினும் நா காக்க’ படத்தை தயாரித்து வருகிறது. இப்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி இப்படத்தில் நடித்திருக்கிறார். ‘யாகவராயினும் நா காக்க’ படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவுற்றவுடன் ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் துவங்குமாம். இதுவரை சீரியஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் ஆதி, முதன்முதலாக ஒரு முழு நீள நகைச்சுவை படமான ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

குடும்ப பின்னணியில் அதீத நகைச்சுவையான திரைக்கதையுடன் வெளிவந்து வெற்றி கண்ட ‘வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்’ தமிழிலும் இதேபோல வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Our Score