full screen background image

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம் திரைப்படம்

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆய்வுக்கூடம் திரைப்படம்

P.K.A. FILMS சார்பில் ஆத்தூர் அறிவழகன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆய்வுக்கூடம்’.

தயாரிப்பாளரின் நண்பரின் மூலம் இத்திரைபடத்தை பற்றி கேள்விப்பட்ட ஒரு முன்னணி ஹிந்தி  இயக்குநர் படத்தை பார்த்து விட்டு “80 கோடியில் எடுக்க வேண்டிய திரைபடத்தை 80 லட்சத்தில் அழகாக  எடுத்துள்ளதாக” கூறி இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்.

இத்திரைப்படம் விரைவில் ஹிந்தியில் மிகப் பெரிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களால் தயாராக உள்ளது. படத்தின் ஹிந்தி ரீமேக்  உரிமையை விற்ற தயாரிப்பாளர் ஆத்தூர் P.அறிவழகன் அந்த பணத்தை வைத்து  தனது நிறுவனத்துக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பை ஆய்வுக்கூடம்  இயக்குநர் அன்பரசனுக்கே கொடுத்து இருக்கிறார். இனிவரும் காலங்களில் இது போன்ற நல்ல படங்களை வாங்கி வெளியிடுவேன் என்று ஆத்தூர் அறிவழகன் கூறியுள்ளார்.

முதல் திரைபடத்தில் மூளையை மாற்றிய இயக்குநர் அன்பரசன் இரண்டாம் படத்தில் மனதை மாற்றுகிறார்.(காதல்தாங்க) “ஆனால் ஆய்வுக்கூடம் படத்தை போலவே இத்திரைபடதிலும் காமெடியும் விறுவிறுப்பும் கண்டிப்பாக குறையவே குறையாது..” என்கிறார் இயக்குநர்.

Our Score