விஷாலுக்கு வில்லனாகிறார் ஆர்யா..!

விஷாலுக்கு வில்லனாகிறார் ஆர்யா..!

நடிகர் விஷாலும், நடிகர் ஆர்யாவும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் 2011-ல் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தைத் தவிர வேறு படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

‘இரும்புத்திரை’ படத்திலேயே ஆர்யாவை நடிக்க வைக்க விஷால் முயற்சி செய்தார். ஆனால், அப்போது பல படங்களில் ஆர்யா தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. ஆர்யாவுக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் அர்ஜூன் நடித்திருந்தார்.

இப்போது ஆர்யா, விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார். அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில்..!

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் நான்காவது படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கப் போகிறார்கள். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும். தமிழில் லென்ஸ்’, ‘வெள்ளை யானை’, மற்றும் ‘திட்டம்’ ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இவர்கள் தயாரிக்கும் 4-வது தமிழ்த் திரைப்படம் இதுவாகும் .

இந்தத் திரைப்படம் விஷாலின் 30 படம் மற்றும் ஆர்யாவின் 32-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Our Score