full screen background image

அரசியல் நையாண்டி திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’

அரசியல் நையாண்டி திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’

ஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.ராம்தாஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’

புதுமுகம் செல்வாவுடன் அனிதா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.சுந்தர்ராஜன். நளினி, வையாபுரி, மீரா கிருஷ்ணன், கிங்காங், கொட்டாச்சி, போண்டாமணி, புரோட்டா முருகேஷ், சரோஜா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இசையில் கபிலேஷ்வர், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். ராம்நாத் படத் தொகுப்பையும், ‘தீப்பொறி’ நித்யா சண்டை பயிற்சியையும், ரமேஷ் ரெட்டி நடன பயிற்சியையும், நாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவும் செய்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பகவதி பாலா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் பகவதி பாலா, “சாதிக்கொரு சங்கம்; வீதிக்கொரு கட்சி’ என பெருகி வரும் நம் நாட்டில் தொண்டர்களைவிட தலைவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  ‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூதான் சர்க்கரை’ என்று பழமொழி உண்டு.

அதேபோல்தான் சிலர் ஆளில்லாத ஊரில் எம்.எல்.ஏ. போல் வலம் வருவார்கள். அப்படி ஒரு ஊரில் இருந்த ஒருவரை பற்றிய கதைதான் இது.

இந்தப் படத்தில் காதல், மோதல், அடிதடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் ஆங்காங்கே உண்டு. இயற்கை எழில் நிறைந்த சேலம் அருகில் உள்ள அழகிய கிராமங்களில் படம் வளர்ந்துள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார்.

Our Score