full screen background image

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘ஆகாசவாணி  சென்னை நிலையம்’

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘ஆகாசவாணி  சென்னை நிலையம்’

மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆகாசவாணி சென்னை நிலையம்’.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் சிவக்குமார், உம்மை சந்தர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அக்ஷதா ஸ்ரீதர், அர்ச்சனா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் மாதவி லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – ஆரிப், இசை – கார்த்திக் கொடக்கண்ட்லா, இணை தயாரிப்பு – கிரந்தி பிரசாத், தயாரிப்பு – M.M.அர்ஜுன், எழுத்து, இயக்கம் – சதீஷ் பத்துலா.

ஜபர்தஸ்த்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சதீஷ், இந்தப் படத்தின் மூலம் திரையுலகத்தில் இயக்குராக அறிமுகம் ஆகிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சதீஷ் பத்துலா பேசும்போது, “இந்த ஆகாசவாணி சென்னை நிலையம்’ திரைப்படம் ஒரு  எண்டர்டெயின்மென்ட் மற்றும் திரில்லிங் கலந்த வித்தியாசமான லவ் ஸ்டோரி.

சிறப்பான நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்கு கிடைத்ததால்தான் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க முடிந்தது.

இந்தப் படம் ரசிகர்களிடையே  மிகுந்த இந்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. படம் விரைவில் 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது…” என்றார்.

தயாரிப்பாளர் எம்.எம்.அர்ஜுன் பேசும்போது, “இயக்குநர் சதீஷ் இந்தக் கதையை  என்னிடம் சொன்ன உடனேயே எனக்கு பிடித்துவிட்டது. அவர் கதை சொன்னதைவிட படத்தை சிறப்பாக இயக்கி முடித்திருக்கிறார்.

இது ஒரு யுனிவர்சல் பாயிண்ட் என்பதால் தெலுங்கு ,தமிழ், கன்னடம், மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகிறோம். விரைவில் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிக்க இருக்கிறோம்…” என்றார்.

Our Score