full screen background image

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..!

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..!

‘நாடோடிகள்’, ‘கோரிப்பாளையம்’, ‘சிந்துசமவெளி’, ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘ஆடு புலி’, ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’, ‘பட்டத்து யானை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.’

இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் ஸ்ரேயா, தமன்னா, கஸ்தூரி, வி.டி.வி.கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், இசை – யுவன் சங்கர் ராஜா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – பால்ராஜ், உமேஷ் ஜெ.குமார், சண்டை பயிற்சி –  ராஜசேகர், உடை வடிவமைப்பு – என்.ஜெ.சத்யா, நடன இயக்கம் – ராபர்ட், சதீஷ், ஒப்பனை – குப்புசாமி, உடைகள் – கணேஷ், தயாரிப்பு – செராபின் ராய சேவியர், எழுத்து, இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இரண்டாவது படம் இது என்பதாலும் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலக வரலாற்றில் ‘பாகுபலி’க்கு பின்பு இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

இந்தப் படத்தில் சிம்பு மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். இதில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய கெட்டப்புகள் மட்டுமே முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

சிம்புவின் மூன்றாவது கெட்டப் இந்தப் படத்தின் கடைசி ஷாட்டில் மட்டும் இடம் பெறுகிறதாம். இரண்டாவது பாகத்தில் இந்த மூன்றாவது கெட்டப்பின் ஆதிக்கமே அதிகமாக இருக்குமாம்.

இந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வரும் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது. சென்சாரில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அதே நேரம் கேரளாவில் 75 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 50 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 50 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 350-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க ஏறக்குறைய 1000 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது என்பது நிச்சயமாக மிகப் பெரிய சாதனைதான். ஏனெனில், சிம்பு நடித்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகும் படம் இது மட்டும்தான்.

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score