ஸ்ரீலலிதாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள A.K.R.திருமண மண்டபத்தில் காலை முதல் மாலைவரை கடந்த 9-ம் தேதியன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவரான ‘கலைமாமணி’ சிவன் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை M.G.R. மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரான டாக்டர். E.R,A.C.S.அருண்குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும், M.G.R. மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தரான டாக்டர் ஏ.சி.சண்முகம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான நடிகர் டி.சிவகுமார் மற்றும் நடிகை எலிசபெத் இருவரும் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள்.
இந்த முகாமில் கல்லூரி முதல்வர் துரை மணி மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ராஜ்காந்த், பரத் மற்றும் இணைச் செயலாளர்கள் சதீஷ், சிவகவிதா, தினேஷ் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில்… செயற்குழு உறுப்பினர்கள் பிர்லா, விஜய் ஆனந்த், தேவ்ஆனந்த், கமலஹாசன், குகன், டி.சிவக்குமார், அரவிந்த், பவித்ரன், ஈஸ்வர், ரகுநாதன், சாந்தி வில்லியம்ஸ், ஆர்த்தி, உஷா, எலிசபெத் சூரஜ், K.P.கற்பகம், வாசவி, ரஞ்சனா மற்றும் போண்டாமணி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சின்னத்திரை கலைஞர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இலவச மருத்துவ ஆயுட் கால உறுப்பினர் கார்டுகளை M.G.R. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான டாக்டர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளர் போஸ் வெங்கட் சிறப்பாக செய்திருந்தார்.
நிகழ்வின் இறுதியில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பொருளாளர் ஜெயந்த் நன்றி கூறினார்.

























