full screen background image

டிரம்ஸ் சிவமணியின் இசையில் உருவாகும் புதிய திரில்லர் படம்..!

டிரம்ஸ் சிவமணியின் இசையில் உருவாகும் புதிய திரில்லர் படம்..!

தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது.

இப்படத்தில் நாயகனாக தொப்பி’  படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். நாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – ஷிவ நடராஜ், ஒளிப்பதிவு – பிரகாஷ், இசை – டிரம்ஸ் சிவமணி, கலை இயக்கம் – நந்து, படத் தொகுப்பு – அகமது, புகைப்படம் – சந்துரு, நடன இயக்கம் – அன்வர், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், பத்திரிகை தொடர்பு – A.ராஜா.

அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜனின் புதுமையான திரைக்கதையில் மாறுபட்ட ரொமாண்டிக், க்ரைம் திரில்லராக  இப்படம் உருவாகிறது.  உலகப் புகழ் பெற்ற இசை வித்தகரான டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் அளவுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.

இப்படத்தின்  படப்பிடிப்பு இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள,  எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score