இயக்குனர் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய எஸ் pictures பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ என்ற திரைபடத்தை வெளியிட உள்ளார்.
ஐ ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக். ஜி.கிருஷ் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘கப்பல்’. இந்தப் படத்தில் நாயகனாக வைபவும், நாயகியாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பரீத்தும் நடித்துள்ளனர்.
தனது சீடன் இயக்கிய ‘கப்பல்’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த இயக்குனர் ஷங்கர், படம் பார்த்த பின்னர் இயக்குனர் கார்த்திக்கிடம் படத்தை பற்றி பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அந்த படத்தை தன்னுடைய எஸ் pictures பட நிறுவனம் மூலம் வெளியிட கேட்டு வாங்கியிருக்கிறார்.
இதை பற்றி இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘என்னுடன் பல படங்களில் பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் ‘கப்பல்’ படத்தை பார்த்த பின்னர் அந்த படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தேன். நீண்ட இடை வெளிக்கு பிறகு என்னுடைய எஸ் pictures பட நிறுவனம் மூலம் திரைப்படத்தை வாங்கி வெளியிடவுள்ளோம்.
இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம். படத்தின் துவக்கத்தில் சிரிக்க ஆரம்பித்த நான் இறுதிவரை சிரித்துக் கொண்டேதான் இருந்தேன். ‘கப்பல்’ எல்லா தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை. தமிழகம் மொத்தமும் இந்த படத்தை ரசித்துக் கொண்டாடும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை ‘ என்று சொல்லியிருக்கிறார்.
நகைச்சுவை படங்கள் ஷங்கருக்கு மிகவும் பிடிக்கும் என்கிறவகையில் அவரையே சிரிக்க வைத்து, படத்தையும் வாங்க வைத்திருக்கிறதெனில் இந்தக் ‘கப்பலில்’ ஏதோ உள்ளது என்றுதான் அர்த்தம்..!.












